தூய்மை இந்தியா திட்டம் பழநி அரசுப்பள்ளிக்கு தேசிய விருது

திண்டுக்கல் மாவட்டம் பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, துாய்மைக்கான தேசிய விருது பெற்றுள்ளது.'துாய்மை இந்திய' திட்டத்தின் கீழ் பள்ளி களுக்கான 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' விருது மத்திய மனிதவள மேம்பாட்டு துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, சோப்புடன் கூடிய கைகழுவும் வசதி, பராமரிப்பு, திறன்மேம்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ் அரசு பள்ளிகளில் மதிப்பீடு செய்யப்பட்டது.இதில் பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேசிய விருது போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
மனிதவள மேம்பாட்டுத் துறையினர், இப்பள்ளியில் ஆய்வு செய்தனர். இதில், பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உட்பட நாடு முழுவதும் 30 பள்ளிகள் தேசிய விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டன. டில்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம், தலைமை ஆசிரியர் பழனிச்சாமி விருது மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றார்.