தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

புதுடில்லி : தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார்.


அதன்படி, தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மேகாலயா கவர்னராக இருந்து வருகிறார். தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவிற்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் 1940 ம் ஆண்டு ஏப்ரல் 16 ம் தேதி பிறந்தவர். இவர் அசாம் கவர்னராக பணியாற்றி உள்ளார். நாக்பூர் லோக்சபா தொகுதியில் இருந்த 3 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். துவக்கத்தில் இவர் அகில இந்திய பார்வர்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் காங்கிரசில் இருந்த இவர் 1991 ல் பா.ஜ.,வில் இணைந்தார்.

இதே போன்று, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு புதிய துணைநிலை கவர்னராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மேகாலயா கவர்னராக கங்கா பிரசாத், அசாம் கவர்னராக ஜெகதீஷ் முகி, அருணாச்சல பிரதேச கவர்னராக பி.டி.மிஸ்ரா, பீஹார் கவர்னராக சத்யபால் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.