பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு அனுமதி

சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், 'சி, டி' பிரிவு ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு போனஸ் வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலர், சண்முகம் வெளியிட்ட, அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், 'சி' மற்றும், 'டி' பிரிவு ஊழியர்கள், குறைந்தபட்சம், 8.33 சதவீதம் போனஸ் மற்றும், 1.67 சதவீதம் கருணைத் தொகை பெற, தகுதி பெறுகின்றனர்.
இவை, போனஸ் சட்டத் திருத்தம் - 2015-ன்படி, 21 ஆயிரம் ரூபாய் வரை, மாத ஊதியம் பெறுவோருக்கும் கிடைக்கும். இதற்கு முன், மாத ஊதிய உச்சவரம்பு, 7,000 ரூபாயாக இருந்தது.
இந்த அரசாணை அடிப்படையில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், 'ஏ3, பி' பிரிவு ஊழியர்களுக்கு, சிறப்பு போனஸ் வழங்குவது தொடர்பாக, தனியே உத்தரவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.