பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தாமதமானால், தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ௧௫ ஆயிரம் சிறப்பாசிரியர்கள், பகுதி நேரமாக, மாதம், 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில்
பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. இவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சரிவர சம்பளம் வழங்குவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன. அதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், 'பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாதம் தோறும், ௨௫ முதல், ௩௦ம் தேதிக்குள், பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மின்னணு முறையில் பெற்று, ௫ம் தேதிக்குள் வழங்கி விட்டு, அறிக்கை தர வேண்டும். 'தாமதமாக சம்பளம் வழங்கினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.