உங்கள் பள்ளியில் நீங்கள் உபரி ஆசிரியரா? உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் (Surplus) கணக்கிடுவது எப்படி ?

உங்கள் பள்ளியின் 6-10 வகுப்பு மாணவர்களை 1.8.2017 நிலவரப்படி கூட்டிக்
கொள்ளுங்கள்.
உதாரணமாக 500 என வைத்துக் கொள்வோம்.
160 மாணவர்களுக்கு 5 பட்டதாரிகள்.
அடுத்து 30 மாணவர்களை தனித்தனியாக சேர்த்து ஒவ்வொரு பாடமாக கொடுக்க வேண்டும்.
190க்கு அடுத்து 2வதாக அறிவியல்
220க்கு அடுத்து 2 வதாக  கணிதம்
250க்கு அடுத்து 2 வதாக .அறிவியல்
280க்கு அடுத்து 2வதாக தமிழ்
310க்கு அடுத்து 2வதாக ஆங்கிலம்.
340க்கு அடுத்து 3வதாக அறிவியல்.
370க்கு அடுத்து 3வதாக கணிதம் .
400க்கு அடுத்து 3வதாக சமூக அறிவியல்
430க்கு அடுத்து 3 வதாக தமிழ்  
460க்கு அடுத்து 3வதாக ஆங்கிலம்
490க்கு அடுத்து 4வதாக அறிவியல்.
இப்போது பள்ளியில் எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையை பின்னால் இருந்து கழித்தம் செய்யவும்.
உதாரணமாக 3 பேர் என்றால் 1ஆங்கிலம்...,1தமிழ்,1சமூக அறிவியலை கழித்து விடவேண்டும்.
அதே வேளையில் 6-8 மாணவர் எண்ணிக்கை 105 இருக்கிறதா என பார்க்கவேண்டும்.அப்பொழுதுதான் அந்த 3 இடைநிலை ஆசிரியர்கள் தக்கவைக்க முடியும்.ஒரு வேளை 6-8 எண்ணிக்கை 70 பேர்தான் என்றால் பட்டதாரி எண்ணிக்கையை கழிக்காமல் 1 இடைநிலை ஆசிரியர் உபரி என அறிய வேண்டும்...