M.Phil.,Ph.D ஆராய்ச்சி படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

எம்.பில்., பி.எச்டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற, பாரதியார் பல்கலை கால அவகாசம் வழங்கியுள்ளது.


பாரதியார் பல்கலை மற்றும் அதன்கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளின் கீழ் எம்.பில்., பிஎச்.டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. 
இதற்கான மாணவர் சேர்க்கை தகுதித்தேர்வு அடிப்படையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை பணிகள் துவங்கியுள்ளது.

பாரதியார் பல்கலைகளின் பல்வேறு துறைகள், கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்கள், கல்லுாரிகளில், பகுதி நேரம் மற்றும் முழுநேர ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம், 12ம் தேதி முதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.இவ்விண்ணப்பங்களை பல்கலை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஜூலை 31க்குள் அனுப்பிவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பதவறியவர்களுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் 21க்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும், விபரங்களை http://www.b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம