புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல்

தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு அறிக்கை, இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்க ளுக்கு, 13 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப் படவில்லை.

 அதனால், பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர்வ தற்கான நுழைவு தேர்வுகளில், தேர்ச்சிபெற முடிவதில்லை.எனவே, பாடதிட்டத்தை மாற்ற, கல்வியாளர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து, ஒன்று முதல், பிளஸ் 2 வரை புதிய பாடத் திட்டத்தை உருவாக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழு சார்பில், சென்னையில், ஜூலை, 20ல், கருத்தரங்கம் நடந்தது. ஜூலை, 25ல், உயர் மட்ட குழு கூட்டம்நடந்தது. இதில், பாடத் திட்ட தயாரிப்பு குறித்து, கொள்கை முடிவுகள் எடுக்கப் பட்டன.ஜூலை, 21, 22ம் தேதிகளில், ஆசிரியர்கள், பேரா சிரியர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவின், பாடத்திட்ட கருத்தரங்கம், சென்னையில் நடந்தது.இதில், பாடத்திட்டம் எப்படி இருக்க வேண் டும் என, கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள் ளன. மேலும், கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநில பாடத்திட்டங்கள், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ். இ., - கேம் பிரிட்ஜ் போன்ற பாடத்திட்டங்களும்,ஆய்வு செய்யப்படுகின்றன.

இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

பாடத்திட்டத்தை இறுதி செய்யும் முன், முதற்கட்டமாக,கலைத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இந்த கலைத்திட்டம் என்பது, பாடதிட்ட வரை வாக இருக்கும். சர்வதேச அளவில், தரமான பாடத் திட்டத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதற் கான, வரைவு அறிக்கை, இன்னும் 2 வாரங்களில், பொதுமக்கள் பார் வைக்கு வெளி யிடப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.