விருதுக்கு ஆசிரியர்களை தேட உத்தரவு முறைகேட்டை தடுக்க வலியுறுத்தல்

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.


முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், நாடு முழுவதும் ஆசிரியர் தின மாக கொண்டாடப்படுகிறது. இதில், மாநிலங் களில் தனித்தனியாகவும், தேசிய அளவில் தனியாகவும், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. 


இந்த ஆண்டு, மாநில அளவில் விருது பெறு வோரின் பட்டியலை, வரும், 20க்குள், மாநில குழுவுக்கு அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், 'மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத் திய, முன்மாதிரியான ஆசிரியர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.'அவர்கள் விண்ணபிக்க வில்லை என, விட்டு விடக்கூடாது. புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை பரிந்துரைக்க கூடாது' என, தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, நல்லாசிரியர் விருது வழங்கியதில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் எழுந்தன. அதிகாரிகளின் உறவினர்கள், மேல் அதி காரிகளுக்கு வேண்டியவர்கள், ஆசிரியர் சங்கத் தினருக்கு நெருங்கியவர்கள், அரசியல்வாதிகளின் உறவினர்கள், நண்பர்கள் போன்றோருக்கு, இந்த விருது வழங்க, சிபாரிசு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நடைமுறை, பள்ளிக்கல்வி செயலர், உதய சந்திரன், இயக்குனர், இளங்கோவன் கூட்டணி யில், மாற்றப்படும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ள னர். அதேபோல, 2016 குழுவில் இடம் பெற்ற அதி காரிகளே, தங்கள் பெயரை சிபாரிசு செய்த சம்பவங்களும் நடக்காது என, நம்பிக்கையில் உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரி யர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் கூறுகை யில், ''பாடம் நடத்துவதிலும், மாணவர்கள் மீதும், பள்ளிக்கல்வியின் உண்மையான வளர்ச் சியில் அக்கறை காட்டுவோருக்கும் நல்லா சிரியர் விருது, வழங்கப்பட வேண்டும். ''எனவே, இதற்கான விதிகளை, பொதுமக்களின் கருத்து கேட்டு மாற்றுவது அவசியம்,'' என்றார்.