எம்.எல்.ஏ-க்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்? - உயர் நீதிமன்றம் அதிரடி

சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தை 55,000 ரூபாயிலிருந்து 1,05,000 உயர்த்தினார். இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
8 அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தமிழக மக்கள் வறுமையில் தவித்து வரும் நிலையில் எம்.எல்.-க்களுக்கு சம்பள உயர்வு தேவையா?
வறுமை, விவசாயிகள் தற்கொலை, கல்விக் கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலையில் தமிழகம் தவித்து வருகிறது. இந்த நிலையில் எம்.எல்.-க்களுக்கு சம்பள உயர்வு தேவைதானா?
சம்பள உயர்வு அளிப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வு சரியானதுதானா என்பது பற்றி எம்.எல்.-க்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி வழக்கைத் தள்ளுபடி செய்தது

தமிழகத்துக்கு கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் அளவுக்கு கடனிருப்பது பற்றி இந்தப் பொது மனுவில் குறிப்பிடப்பட்டது.