பள்ளிகல்வித்துறைக்கு புதிய முதன்மைச் செயலர் நியமனம்

தமிழக பள்ளிகல்வித்துறையின் செயலராக உதயசந்திரன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், புதிய முதன்மைச் செயலராக பிரதீப் யாதவ் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அவரை நியமித்து உத்தரவிட்டார்.
தமிழக பள்ளிகல்வித்துறையில் இதுவரை செயலர் என்ற பொறுப்பு மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில், புதிதாக முதன்மைச் செயலர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டது.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக இருந்த பிரதீப் யாதவ் தற்போது தமிழக பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பள்ளிகல்வித்துறை செயலராக இருந்த உதயசந்திரன், பாடதிட்டத்துக்கு மட்டும் பொறுப்பு வகிப்பார்.

மேலும், முதன்மைச் செயலர் பிரதீப் யாதவின் கீழ் செயல்படுவார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.