பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவு

 'மாணவர்களுக்கு, அதிக மன அழுத்தம் ஏற்படாத வகையில், சுதந்திர தினவிழா கொண்டாட்டம் இருக்க வேண்டும்' என, தன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில், நிருபர்களிடம் கூறியதாவது: மாணவர்களுக்கு தேசப்பற்றை ஊட்டும் வகையிலும், தேசப் பெருமையை அறிந்து கொள்ளும் வகையிலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின், 75ம் ஆண்டு விழாவுடன், சுதந்திர தின விழாவை சேர்த்து கொண்டாடும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விழாக்கள், மாணவர்களுக்கு, அதிகளவில் மன அழுத்தம் ஏற்படுத்தாத வகையில் கொண்டாடப்பட வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, சி.பி.எஸ்.இ., அதிகாரி கூறினார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks