தமிழகத்தில் பிளஸ் 1 , பிளஸ் 2 பாடங்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாகவும் ; ஒன்று
முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்கள் ஆறு ஆண்டுகளாகவும் மாற்றப்படவில்லை.
அதனால், பாடத்திட்டத்தை மாற்றும்படி, பல்வேறு தரப்பிலும் அழுத்தம் தரப்பட்டது. இதையடுத்து, பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான பணிகளை தமிழக அரசு துவக்கியுள்ளது.
இதற்காக, கலைத்திட்டக்கழு, பாடத்திட்ட உயர்மட்டக்குழு என இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டம் ஜூலை 25ல் சென்னையில் நடந்தது. இரண்டாவது கூட்டம், வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. ஒரு மாதத்தில் முதற்கட்ட பாடத்திட்ட உருவாக்கம் முடியும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.