ஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால் சர்ச்சை- DINAMALAR

தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் சமீபத்தில் 150 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் செய்யப்பட வேண்டும். 


ஆனால், கலந்தாய்வு அறிவிக்கப் படாமலேயே மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 3 லட்ச ரூபாய் முதல் 8 லட்ச ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் நேர்மையானவர். அவருக்கு தெரியாமல் ஒரே நாளில் பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். வெளிப்படையான கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்க வேண்டும்' என்றார்.