அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு: முதற்கட்ட கலந்தாய்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

புதுதில்லி: அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின் முதற்கட்ட கலந்தாய்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை www.mcc.nic.in என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் முதற்கட்ட கலந்தாய்வு முடிவுகளையும் மேற்கண்ட இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.