தொகுப்பூதிய வழக்கு தொடர முடிவு

அன்பான நண்பர்களே ..

🛑இன்று 08.07.2017 தொடுக்கப்பட வேண்டிய தொகுப்பூதிய வழக்கு ஒரு வாரகாலம் ஒத்திவைக்கப்படுகிறது ..
ஏனெனில் ..
🔥திருப்பூர் மாவட்ட நண்பர்கள் 40பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் wp.no. 6655/2015 எண் கொண்ட வழக்கில் சென்ற வெள்ளிக்கிழமை சாதகமான நீதிப்பேராணையை பெற்றுள்ளதாலும் ..
தீர்பாணை நகல் கிடைக்க ஒரு வாரகாலம் ஆகும் என்பதாலும் ...
நீதிப்பேராணையை ஒட்டி நமது வழக்கை முன்னெடுக்க வேண்டி இருப்பதாலும் ..
🚩பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள கோரி இருப்பதாலும் ..
அனைத்து விடயங்களையும் ..அனைவரின் பங்களிப்பையும் கோரும் முடிவிலும் ...
"தொகுப்பூதிய வழக்கு " எதிர்வரும் சனிக்கிழமை 15.07.2017 அன்று மாற்றமின்றி கண்டிப்பாக தொடரப்படும் என்று அனைவருக்கும் தெரிவித்துள்ளோம் ..
🛑வழக்கிற்காக வருபவர்கள் துரிதமாக செயலாற்ற அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் ..
தொகுப்பூதிய வழக்கில் அரசும் நீதிமன்றமும்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Consideration judgement தற்போதைய
நடைமுறையில் எடுபடாது .
.அரசாணையை challenge செய்து அரசின் பதிலை பெற்று விவாதம் செய்து பதிலை பெற்று இறுதி தீர்ப்பை பெறுவதே தீர்வு .
.ஆனால் நீதிமன்றத்திற்கு அரசு அவ்வளவு விரைவில் பதில் தராது ..
மேலும் வழக்கு நீதிபதிகள் அமர்விற்கு மாற்றப்படலாம் ..
கடந்தகாலங்களில் சென்னை உயர்நீதிமன்றங்களில் 1990-1992 தொகுப்பூதிய வழக்குகளில் அரசின் மேல்முறையீட்டை நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தே பணப்பலன்களை வழங்கி உள்ளது ..
உச்சநீதிமன்றம் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை 2013 நீதிப்பேராணை வழியாக உறுதி செய்துள்ளது
இவைகளை எல்லாம் கொண்டு consideration கோராமல் இறுதி ஆணையை நோக்கி வழக்காடினால். கண்டிப்பாக வெல்வோம் .
இதற்கு காலம் பிடிக்கும் .
நன்றி
வழக்கு ஒருங்கமைப்பு
சுரேஷ்மணி
நாமக்கல்

9943790308