டிஆர்டிஓவில் நூலக அறிவியல், கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை

மத்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ தொடர்பான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான பல்வேறு பணியிடங்களுக்கு நூலக அறிவியல் 2 ஆண்டு டிப்ளமோ மற்றும் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 45
1. லைபிரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ் - 30
2. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 15
தகுதி: நூலக அறிவியல் 2 ஆண்டு டிப்ளமோ, பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director, DESIDOC, Metcalfe house, Delhi110054.