மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப்.. அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் தங்கமணி!

சென்னை: மின்கட்டணம் செலுத்த மொபைல்-ஆப் சேவையை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த சில நாட்களுக்கு முன் கடையநல்லூர் தொகுதி கீழ்பிடாரி பேரூராட்சியில் ஏற்கெனவே இருந்த மின் கட்ட வசூல் மையம் வேறு இடத்துக்கு மாற்றியமைக்கப்பட்டுவிட்டதாக அத்தொகுதி உறுப்பினர் அபுபக்கர் தெரிவித்தார்.
மீண்டும் கீழ்பிடாரியில் மின் கட்டண மையத்தை அமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த மின் துறை அமைச்சர் தங்கமணி, மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மொபைல் ஆப் நடைமுறைக்கு வந்தால், மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை எளிமையாகிவிடும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், இன்று மின் கட்டணம் செலுத்துவதற்கான மொபைல் ஆப் சேவையை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை எளிமையாகும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.