ஜாக்டோ - ஜியோ நாளை ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், நாளை, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின் ஆலோசனை கூட்டம், ஜூலை, ௧௧ல் சென்னையில் நடந்தது.

இதில், மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்
களுக்கு அமல்படுத்த வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதற்கு முன், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்
பட்டது.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில், நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதில், ஆசிரியர்கள், அரை நாள் விடுப்பு எடுத்து பங்கேற்க தீர்மானித்துள்ளனர்.

'இந்த போராட்டத்திற்கு பிறகும், அரசு பேச்சு நடத்தாவிட்டால், ஆக., ௫ல், சென்னையில் கோட்டையை நோக்கி, மிகப்பெரிய பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்' என, ஜாக்டோ நிர்வாகிகள் தெரிவித்துஉள்ளனர்.