சிறப்பு பாட ஆசிரியர் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு

சிறப்பு பாட ஆசிரியர் நியமனத்துக்கான, பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 2012ல், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள், சிறப்பு பாடங்களை கற்பிக்க நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, தொகுப்பூதியத்தில், மாதம், 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கேட்டு, போராடி வருகின்றனர். இந்நிலையில்,
போட்டி தேர்வுகள் மூலம், ஓவியம், தையல், இசை மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றில், 1,188 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

போட்டி தேர்வுக்கான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது; ஆக., 19ல், தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான பாடத்திட்டம், நேற்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை செயலராக சபிதா இருந்த போது, 2015ல், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே பாடத்திட்டம், இந்த போட்டி தேர்வுக்கு பின்பற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது
Click Here-Syllabus for Direct Recruitment of Special Teachers