7TH PAY COMMISSION - அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சம்பள விவகாரம்... வெடிக்கிறது!

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்த வலியுறுத்தியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர். 

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,சம்பள,விவகாரம்,வெடிக்கிறது!



இது தொடர்பாக நாளை நடக்கும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் 2003ல் நடத்திய போராட்டம் தமிழக அரசை ஸ்தம்பிக் கச் செய்தது. பின் 2016ல் இந்த அமைப்பினர் மீண்டும் போராட்ட அறிவிப்பு வெளியிட்டு 2 நாட்கள் போராட்டம் நடத்தினர். அப்போது 'புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப் படும்' என முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். 

அதைத் தொடர்ந்து அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும் இது தொடர்பாக வாக்குறுதி 

அளிக்கப்பட்டது.இருப்பினும் இதுவரை 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமலாக வில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்துவது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைத்து ஓராண்டாகியும் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகவில்லை. 

இந்த பிரச்னையால் மீண்டும் போராட்டம் நடத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.இதற்காக கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நாளைபகல் 2.00 மணிக்கு, சென்னை மாநில கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. 

இது தொடர்பாக, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் கூறிய தாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. தமிழக அரசு இன்னும் உயர்த்த வில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் ஓய்வூதியதாரர் கள் என18லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதிய ஊதியம்அமலாகும் முன் 20 சதவீத இடைக்கால நிவாரணம் கேட்டோம்; அதையும் வழங்கவில்லை.

'பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம்' என அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை யில் கூறிய பிறகும் அதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டிஇன்னும் அறிக்கைசமர்ப்பிக்க வில்லை. இதனால்4.5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. எனவே போராட்டம் நடத்துவது குறித்து நாளை முடிவு செய்ய உள்ளோம். 63 சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கு வர கடிதம்

கொடுத்துள்ளனர். இன்னும் பல சங்கங்கள் எங்களுடன் இணைய உள்ளன. 

போராட்டம் நடத்த முடிவானால் 10லட்சம் பேர் அதில் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், போராட்டம் நடத்த முடிவு செய்தால் அது தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க் கப்படுகிறது. அத்துடன் தமிழக அரசு அலுவல கங்களில் நிர்வாக பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயமும் உருவாகும்.


ஊதிய உயர்வை சமாளிக்குமா அரசு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திற் காக நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப் பட்டால் சராசரியாக 25 சதவீதம் வரை அடிப் படை ஊதியம் உயரும். இதற்கு மாதந்தோறும் 1,500 கோடி ரூபாய் வரை அரசுக்கு கூடுதல் செலவாகும்.மத்திய அரசிடம் இருந்து பல வகை மானியங்கள் மற்றும் ஆசிரியர்களுக் கான சம்பளம் போன்றவை தமிழக அரசுக்கு நிதியுதவியாக கிடைப்பதால் கூடுதல்செலவை அரசால் சமாளிக்க முடியும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks