ரூ.500க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: ஜியோ அடுத்த அதிரடி

புதுடில்லி: மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கி மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்த ரிலையன்ஸ் ஜியோநிறுவனம், அடுத்த அதிரடிக்கு தயாராகி உள்ளது.
ஜியோ,Geo, ஸ்மார்ட் போன், smart phone,ரூ.500, Rs.500, டேட்டா,data, 4ஜி டேட்டா, 4G data,

ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 112.55 மில்லியனை எட்டி உள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ரூ.500 க்கு 4ஜி மொபைல்போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூலை 21 ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் அல்லது ஆகஸ்ட் துவக்கத்தில் இத்திட்டத்தை ஜியோ முறைப்படி அறிமுகம் செய்ய உள்ளது. ரூ.1000 க்கு மொபைல் போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், எதிர்ப்பார்ப்புக்களை விட மேலும் விலையை குறைத்து, ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது ஜியோ.
ஆகஸ்ட் 15 அன்று தங்களின் புதிய திட்டத்தை துவக்கவும், ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக 2ஜி வாடிக்கையாளர்கள் இந்த புதிய போன் மூலம் நேரடியாக 4ஜி க்கு தங்களை மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் 2ஜி வாடிக்கையாளர்கள் தங்களை 4ஜி க்கு மாற்றி கொள்வதற்காக இந்த போனை அதிகம் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் ஜியோ, தனதுடன் டனா டன்' சலுகையின் புதிய திட்டத்தின் ஆரம்ப விலையை மாதத்திற்கு ரூ.150 ஆக நிர்ணயித்துள்ளது. மேலும் ரூ.80 முதல் 90 என்ற சலுகை கட்டண திட்டத்தையும் ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது டன் டனா டன் திட்டத்தில் ரூ.309 அல்லது ரூ.509 க்கு இலவச வாய்ஸ், அளவில்லா எஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ், தினமும் 1 முதல் 2 ஜிபி டேட்டா சேவையை வழங்கி வருகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேவை ரூ.99 க்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.புதுடில்லி: மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கி மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்த அதிரடிக்கு தயாராகி உள்ளது. ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 112.55 மில்லியனை எட்டி உள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ரூ.500 க்கு 4ஜி மொபைல்போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூலை 21 ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் அல்லது ஆகஸ்ட் துவக்கத்தில் இத்திட்டத்தை ஜியோ முறைப்படி அறிமுகம் செய்ய உள்ளது. ரூ.1000 க்கு மொபைல் போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், எதிர்ப்பார்ப்புக்களை விட மேலும் விலையை குறைத்து, ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது ஜியோ. ஆகஸ்ட் 15 அன்று தங்களின் புதிய திட்டத்தை துவக்கவும், ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக 2ஜி வாடிக்கையாளர்கள் இந்த புதிய போன் மூலம் நேரடியாக 4ஜி க்கு தங்களை மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் 2ஜி வாடிக்கையாளர்கள் தங்களை 4ஜி க்கு மாற்றி கொள்வதற்காக இந்த போனை அதிகம் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஜியோ, தனதுடன் டனா டன்' சலுகையின் புதிய திட்டத்தின் ஆரம்ப விலையை மாதத்திற்கு ரூ.150 ஆக நிர்ணயித்துள்ளது. மேலும் ரூ.80 முதல் 90 என்ற சலுகை கட்டண திட்டத்தையும் ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது டன் டனா டன் திட்டத்தில் ரூ.309 அல்லது ரூ.509 க்கு இலவச வாய்ஸ், அளவில்லா எஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ், தினமும் 1 முதல் 2 ஜிபி டேட்டா சேவையை வழங்கி வருகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேவை ரூ.99 க்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.