14-வது குடியரசுத் தலைவர் ஆகிறார் ராம்நாத் கோவிந்த் வருகின்ற 24-ம் தேதி பதவியேற்கிறார்

குடியரசுத் தலைவர் தேர்தல், கடந்த திங்கள் கிழமை நடந்தது. பா.. சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். இதன் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. முதல் இரண்டு
சுற்றுகள் முடிவில் ராம்நாத் கோவிந்த், மீரா குமாரை விட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார்.
4,79,595 வாக்குகள் பெற்று பா.. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், அபார முன்னிலையில் இருந்தார். இரண்டாவது சுற்றின் முடிவில் எதிர்க்கட்சி வேட்பாளரான மீராகுமார் 2,04,594 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார்கிட்டத்தட்ட 60 சதவிகித வாக்குகள் பெற்றிருந்ததால் ராம்நாத் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த், வருகின்ற 24-ம் தேதி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ராம்நாத் கோவிந்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.