உலக அளவில் கடலோரத்தில் இருக்கும் 136 பெரு நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்

பசிபிக் மற்றும் ஆசிய பகுதிகளில் பருவநிலை மாற்றம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக அண்மையில் ஆசிய மேம்பாட்டு வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் சீனா, இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அதிக அளவு பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
உலகம் வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால் இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள கடலோர பகுதிகள் கடலில் மூழ்கும் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான ஆண்டாக கடந்த 2016ம் ஆண்டு இடம்பிடித்துள்ளது. மேலும் இந்த 2017ம் ஆண்டிலும் கடந்த ஆண்டைவிட அதிக வெப்பம் பதிவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த உலக வெப்பமயமாதலாலும் பருவநிலை மாறுபாட்டாலும் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளில் உள்ளவர்களில் 13 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் கடலோரப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
2005 மற்றும் 2050 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் கடலோரத்தில் இருக்கும் 136 பெரு நகரங்கள் கடலில் மூழ்கும். இவற்றில் டாப் 20 நகரங்கள் ஆசிய கண்டத்தில் உள்ளது. கொல்கத்தா, மும்பை, சென்னை, சூரத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களும் மூழ்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.