பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றம்!

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை, தினமும் மாற்றியமைக்கும் முறை, நாடு முழுவதும், வரும், 16ம் தேதி அமலாகிறது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை, 15 நாட்களுக்கு ஒரு முறை, எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை, பல நாடுகளில், தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், இந்தியாவிலும், சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்க, எண்ணெய்

நிறுவனங்கள் ஆலோசித்துவந்தன. சோதனை அடிப் படையில், புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி யமைக்கும் முறை, கடந்த மாதம் அமல்படுத்தப் பட்டது.

இந்நிலையில், வரும், 16ம் தேதி முதல், நாடு முழுவதும்,இந்த திட்டத்தைஅமல்படுத்த, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எண்ணெய் நிறுவன அதிகாரிகளை, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை, தினமும்

மாற்றியமைக்கும் திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த, ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, '16ம் தேதி முதல், இந்த திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்' என, எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.