பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியீடு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க 65பேர் கொண்ட சிறப்பு நிபுணர்கள் பயிற்சி பெற்ற ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியலாளர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் குறிப்பிட்ட இந்த 1800-11-8004 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.