தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு

கேரளாவில் மே, 30ல் துவங்கிய தென் மேற்கு பருவமழை, கேரளா, கர்நாடகா மற்றும் எல்லையோர தமிழக பகுதிகளில் பெய்கிறது. தமிழகத்தில் இன்னும்
தீவிரமடையவில்லை.
இந்நிலையில், 'நாளை முதல் இரு நாட்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், மழை பெய்யும்; வரும், 9ம் தேதி, தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, குழித்துறையில், 2; பேச்சிப்பாறை, தக்கலை மற்றும் திருத்தணியில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.