பள்ளி திறக்கும் நாளில் இரண்டு 'செட்' சீருடை

பள்ளிகள் திறக்கும் அன்றே, மாணவர்களுக்கு இரண்டு, 'செட்' சீருடைகள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மதிய உணவு அருந்தும், 45 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுக்கு, நான்கு செட் சீருடைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த சீருடைகளை, பள்ளிக்கல்விக்காக, சமூக நலத்துறை தயார் செய்து வழங்குகிறது.புதிய கல்வி ஆண்டு, இன்று துவங்கும் நிலையில், முதற்கட்டமாக, இரண்டு செட் சீருடைகள், மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளன. பள்ளி திறக்கும் முதல் நாளில், இரண்டு செட் சீருடையும், பின், ஆக., - செப்டம்பரில், மீதமுள்ள இரண்டு செட் சீருடையை வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.