ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்



ஓய்வூதியம் என்றால் என்ன?
 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்காக தங்களுடைய இளமை
காலம் முழுவதும் உடல் பலமாக இருக்கும் போது அரசுக்கும் மக்களுக்கும் இடையே அச்சாணியாக சுழன்று  அரசுக்கும் மக்களுக்கும் தங்களுடைய பணிக்காலம்
முழுவதும் முழு உழைப்பை செலுத்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள்
முதுமை அடைந்து நாடி நரம்புகள் சுருங்கிய பின்பு எந்த வேலையும் செய்ய இவர்களது
உடல் தகுதியற்றது எனும் போது 58 வயதில் பணியிலிருந்து அரசால் ஓய்வு
அளிக்கப்படுகிறது. அவ்வாறு ஓய்வு பெற்றவர்கள் உயிர்வாழ தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் சமுதாயத்தில் கெளரவமாகவும் வாழ்வதற்கும்        

  மற்றவர்நகளை    நம்பி இருக்காமல் வாழ்வதற்கும், 20 ஆண்டுகளுக்கு
மேல் அரசாங்கத்திற்காக உழைத்த உழைப்பிற்காக அரசால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓர் ஊதியம் வழங்கப்படுகிறது.அந்த ஊதியமே ஓய்வூதியம் எனப்படுகிறது.ஓய்வூதியம் என்பது முதுமை வாழ்க்கையின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. அந்த ஓய்வூதியம் என்பது 2003க்கு பின்னர் அரசு பணியில்
சேர்ந்தவர்களுக்கு கேள்வி குறியாகவே உள்ளது.


கேள்வி குறியான ஓய்வூதியம்
 அதாவது 1.4.2003க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றோர்
மற்றும் பெறுவோரின் ஓய்வுக்கு பின் உயிர்வாழ அடிப்படை தேவைகளான உணவு ,உடை,மருத்துவம் போன்றவற்றிற்காகமுதுமையில் சாலையில் கண்டவர்களிடம் கையேந்தி நிற்றல், யாராவது கொடுப்பாரா ?என எதிர்பார்த்திருத்தல், தள்ளாடும் நிலையில் மருந்துகள் வாங்க காசு இல்லாமல் சாகுதல், பணமில்லாததால் உறவுகளால் வீதியில் தள்ளப்படுதல், ஒரு வேலை சாப்பாட்டிற்காக வேறுவழி
இல்லாமல் ஏரி வேலை செல்லுதல் போன்ற அவலநிலைகளுக்குஉள்ளாகுகின்றனர்.இதற்கு காரணம் தற்போது நடைமுறையிலுள்ள cps என்னும் புதிய பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டம் தான். இத்திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும்/

பெறுபவர்களுக்கும் ஓய்வூதியம் என்பதே இன்று வரை கிடையாது. Cps பணிபுரியும் ஊழியர்களாகிய நாம் ஓய்வு பெற்ற பின்
ஓய்வூதியம் இல்லாமல் அடிப்படை தேவைகளுக்காக நடுரோட்டில் கையேந்தி நிற்போம் என்பதில் எந்த வித மாற்றமில்லை என்பதை அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன்.


ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்


ஓய்வூதியத்திற்கு நீதித் துறையின் அங்கங்கமான நீதி மன்றத்தாலும், இந்திய
அரசியலமைப்பாலும் ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் உரிமையென பல்வேறு
வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இனி காண்போம்.


நீதித் துறையின் படி ஓய்வூதியத்தின் வரையறைகள்
நமது நாட்டின் நீதித் துறையின் மிக உயர்ந்த அங்கமான உச்ச நீதி மன்றத்தால்
வழங்கப்படும் தீர்ப்புகள் என்பது எழுதப்படாத சட்டமாக கருதப்படுகிறது.அவ்வாறே ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளில் ஓய்வூதியம் என்பதை  உரிமையென்றே வரையறை செய்யப்பட்டுள்ளது. அவைகளான
# ஓய்வூதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி 17.12.1982 அன்று
நகரா என்பவர் இந்திய அரசின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் அளித்த தீர்ப்பின் படி ஓய்வூதியம் என்பது நன்கொடையோ அல்லது கருணை தொகையோ அல்ல. அது ஓய்வூதியர்களின் மதிப்புமிகு உரிமை என்றும் அரசு ஊழியர்களின்
நீண்ட கால மற்றும் திறமையான பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..


# ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த ஜித்தேந்திர குமார் என்பவர் ஓய்வூதியம்
தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஓய்வூதியம் என்பது ஊழியரின்
உரிமையாகும்.இதனை இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 31 B உறுதி செய்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


இந்திய அரசியலமைப்பின் படி ஓய்வூதியத்தின் வரையறைகள்


@ ART-14 சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும்.(உரிமைகளை வழங்கும் போது முன்/பின் என்று வேறுபடுத்தி உள்ளது.)


@ ART-31B, சில சட்டங்களையும், ஒழுங்கு விதிமுறைகளையும் செல்லத்தக்கவனவாக்குதல்.


@ ART-41,முதுமை நோய் இயலாமை மற்றும் உடல் ஊனம் போன்ற நேர்வுகளின் போது அரசு வழங்க வேண்டிய உதவிகளை செய்து சமுதாயத்தில் ஒரு மேம்பட்ட வாழ்க்கை
வாழச் செய்வதே சேமநல அரசு செய்யும் பணி என்று வரலாற்று சிறப்புமிக்க
தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.


@ ART-148 நகரா வழக்கின் தீர்ப்பில் அரசியல் சட்டம் 309 மற்றும்
148(5)ன்படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்பட்ட வேர்
ஊன்றி நிலைத்த உரிமையாகும் என்று ஓய்வூதியர்களுக்கு ஒரு உரிமை சாசனம்
(Magna carta) வழங்கியுள்ளது.


@ ART-309 ஒரு மாநிலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணியின்

 வரையறைகள், விதிகள் மற்றும் ஊதியங்கள் போன்றவற்றை மாநில அரசு வரையறை செய்யப்படவேண்டும். மேலும் அவ்வொழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்கள் உயிர்வாழ்வதற்க அந்தந்த மாநில அரசிடமிருந்துஓர் ஊதியம் பெற உரிமை உடையவராவார். இச்சரத்தின் அடிப்படையிலே தமிழக அரசும் தமிழ்நாடு ஓய்வூதிய
விதிகளை  1978இல் உருவாக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்குவது நடைமுறையில்
உள்ளது.ஆயினும் 01.04.2003க்கு பின் தமிழக அரசில்  பணிநியமனம்
பெற்றவர்களுக்கு இந்த பழைய ஓய்வூதிய திட்டம் பொருந்ததாது.

இதன் தொடர்ச்சி  அடுத்த பதிவில்.

 இவன்

அ.ஜெயப்பிரகாஷ்

அரூர் ஒன்றியம்.தருமபுரி.