நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மனு

புது தில்லி: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மனு தாக்கல் செய்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் கடந்த மே 7ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த தேர்வில் ஒவ்வொரு மொழியிலும் வினாத்தாள்கள் வேறுபட்டிருந்ததாகவும், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.