மனுக்கள் அளித்தே பள்ளியை சீராக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

"மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு ஓர் ஆசிரியரின்கடமை முடிந்துவிடுவதில்லைநல்ல குடிமக்களைஉருவாக்குவதிலும் பெரிய பொறுப்பு இருக்கிறது என்பது என்எண்ணம்ஆசிரியர்கள் செய்யும் நல்ல விஷயங்கள்,மாணவர்கள் மனதில் நன்றாகப் பதிந்துநாம் சொல்லாமலேஅவர்களைச் செய்யவைக்கும்அதனால்தான் என்னால் 
முடிந்த சிறுசிறு சமூக விஷயங்களைச் செய்துவருகிறேன்எனஅடக்கமாகப் பேசுகிறார்ஆசிரியர் சாந்தகுமார்.



 அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்தகுமார்
நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு அருகிலுள்ளசானார்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்.சலிப்பின்றி மனுக்களைக் கொடுத்து பள்ளியின் தேவைகளைப்பெறுவதுதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத்தேவைப்படுவோருக்கான உதவிகளைப் பெற்றுத் தருவது,மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்துகளை உருவாக்குவதுஎன இவரது சமூக அக்கறை நீள்கிறது.\


மனுக்கள் அளித்தே பள்ளியை சீராக்கிய அரசுப் பள்ளிஆசிரியர்!

அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்தகுமார்

"மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு ஓர் ஆசிரியரின்கடமை முடிந்துவிடுவதில்லைநல்ல குடிமக்களைஉருவாக்குவதிலும் பெரிய பொறுப்பு இருக்கிறது என்பது என்எண்ணம்ஆசிரியர்கள் செய்யும் நல்ல விஷயங்கள்,மாணவர்கள் மனதில் நன்றாகப் பதிந்துநாம் சொல்லாமலேஅவர்களைச் செய்யவைக்கும்அதனால்தான் என்னால் முடிந்தசிறுசிறு சமூக விஷயங்களைச் செய்துவருகிறேன்எனஅடக்கமாகப் பேசுகிறார்ஆசிரியர் சாந்தகுமார்.

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு அருகிலுள்ளசானார்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்.சலிப்பின்றி மனுக்களைக் கொடுத்து பள்ளியின் தேவைகளைப்பெறுவதுதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத்தேவைப்படுவோருக்கான உதவிகளைப் பெற்றுத் தருவது,மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்துகளை உருவாக்குவதுஎன இவரது சமூக அக்கறை நீள்கிறது.

மனு அளித்து மூடப்பட்ட கிணறு
 மனு அளித்து மூடப்பட்ட கிணறு
"கும்பகோணம் தீ விபத்து சம்பவம் என் மனசுல பெரியதாக்கத்தை ஏற்படுத்திச்சுநாம் வேலை செய்யும் இடத்தில் ஒருகுழந்தைக்குக்கூட சின்ன விபத்து நடந்துடக்கூடாதுனுஉறுதியாக இருந்தேன்சில வருஷங்களுக்கு முன்னாடி,பள்ளிக்குள்ளே இருந்த டிரான்ஸ்ஃபார்மரில் அடிக்கடிதீப்பொறி வந்துட்டு இருந்துச்சுபள்ளிக்கு மேலாக உயரழுத்தமின் கம்பியும் இருந்துச்சுஇது எந்த நேரத்திலும்மாணவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கலாம்னு நினைச்சேன்.கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத்தொடர்ச்சியாக மனுக்களைப் போட்டு இரண்டையுமே வேறுபகுதிக்கு மாற்றினேன்பள்ளி வளாகத்தில் ஆபத்தானநிலையில் ஒரு மூடாத கிணறு இருந்துச்சுஅதைச் சுற்றிஇரும்புத் தடுப்புகள் அமைக்க வைத்தேன்'' என்கிறார்சாந்தகுமார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கடந்த ஏழுஆண்டுகளில் முந்நூற்றுக்கும் அதிகமான மனுக்களைவிண்ணப்பித்துபலவற்றில் வெற்றிபெற்றிருப்பது இவரதுஹைலைட்.

மாணவர்களுடன் மரக்கன்றுகள் நடும் சாந்தகுமார்
''எல்லாமே பள்ளிக்கும் சுற்றுவட்டார மக்களுக்கும் பயன்படும்விஷயங்கள்ஆண்டுதோறும் திருச்செங்கோடு நகராட்சிசார்பில்அரசுப் பள்ளிகளுக்கு ஒரு கோடி ரூபாய் வரை கல்விப்பணிகளுக்குச் செலவழிக்க வேண்டும் என்பது நடைமுறை.இந்தச் செலவினங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்இப்போஅந்தப்பணம் முறையாக பல பள்ளிகளுக்கும் செலவழிக்கப்படுது.டி.எல். எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளிட்டதேர்தல் சார்ந்த முகாம் பணிகளுக்கும்கள ஆய்வு மற்றும் மனுவாங்கும் பணிகளுக்கும் உடல்நிலை சரியில்லாதஆசிரியர்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாங்கஇதைஎதிர்த்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுக்கொடுத்தேன்இப்போஉடல்நிலை சரியில்லாத ஆசிரியர்கள்டி.எல். பணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்காங்கஎன்கிறசாந்தகுமார்சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் தான் பணியாற்றும்பள்ளிகளுக்கு உதவி பெற்றுள்ளார்.



"பல வருஷங்களுக்கு முன்னாடி கல்வி அதிகாரி ஒருவர்பள்ளிக்கு வந்தார்அலுவலகச் செலவுக்காக எல்லாஆசிரியர்களும் குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கணும்னுகேட்டு வாங்கினார்இதை எதிர்த்து கலெக்டரிடம் புகார்கொடுத்துபணத்தைத் திரும்ப வாங்கினோம்மற்றொரு கல்விஅதிகாரிஆசிரியர்கள் பணம் கொடுக்க வேண்டும் எனசர்க்குலரே வெளியிட்டார்அதனை ஆதாரமாக வைத்துபள்ளிக் கல்வி இயக்குநருக்குப் புகார் அனுப்பினேன்அந்தஅதிகாரியைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தாங்கஎங்கள்ஒன்றியத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியைஒருவரை தரக்குறைவாகப் பேசிய தாசில்தார் பற்றிஉயர்அதிகாரிகளிடம் புகார் செய்து மன்னிப்பு கேட்கவெச்சேன்.திருச்செங்கோட்டில் தனியார் கட்டடத்தில் இயங்கிவந்த அரசுநூலகத்தைபல முயற்சிகளுக்குப் பிறகு அரசுக் கட்டடத்துக்குமாத்தினேன்'' என்று அடுக்குகிறார் சாந்தகுமார்.
விதைகள் சேகரிப்பில் மாணவர்கள்
மாணவர்களிடமும் சமூகச் சிந்தனையை விதைக்கும் விதமாக,பள்ளி மற்றும் அவரவர் வீடுகளுக்கு அருகே இருக்கும்மரங்களிலிருந்து விழும் விதைகளைச் சேகரிக்கச் செய்கிறார்சாந்தகுமார். ''அப்படிச் சேகரிக்கும் விதைகளைமழைக்காலங்களில் விதைப்பந்துகளாகத் தயார்செய்துசுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசுவோம்விதைப்பந்துகள் பலவும்செடிகளாகிமரங்களாக வளர்ந்துட்டிருக்கு'' எனப்புன்னகைக்கிறார்.