தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின், 17வது மாநில மாநாடு திருச்சியில் நேற்று நடந்தது.
முன்னாள் எம்.எல்.சி.,யும் மாநாட்டு தலைவருமான முத்துசாமி, மாநாட்டை
துவக்கி வைத்து பேசியதாவது: ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண,
மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் அளித்த தேர்தல்
வாக்குறுதிப்படி, 'பென்ஷன்' திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட கமிட்டி,
இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், மாநில அரசு, ஆசிரியர்களின் ஊதியத்தைக் குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கல்வித் துறைக்கு புதிய செயலர் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தொடக்கக் கல்வித் துறையில் பள்ளிகளை நிர்வாகம் செய்யவும், ஆசிரியர் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், நிர்வாக சீர்திருத்த கமிஷன் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.