மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு... 85 சதவீதம்

தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது.
'நீட்' தேர்வு மதிப்பெண்படியே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும், பிளஸ் 2 மார்க் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என்றும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள் ளார். இதன் அடிப்படையில், ஜூலை, 17ல் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங் துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - துரைமுருகன்: 'நீட்' தேர்வு முடிவு கள் வெளியாகி உள்ளன. அதை பார்த்தால், தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர்; தமிழகம் படுபாதாளத்திற்கு சென்று உள்ளது. இதை எப்படி மீட்பது என்பது, மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. 
இதனால், வருங்கால சமுதாயம், மிகவும் பாதிக்கப்படும். எனவே, 'நீட்' தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள, தமிழகத்தை மீட்க, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
காங்கிரஸ் - விஜயதாரணி: சட்டசபையில், அனைவரும் ஒருமித்த மனதோடு சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்காக, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். இதுவரை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு, மத்திய அரசு பரிந் துரை செய்யாமல் உள்ளது. இதை, தமிழகத் திற்கும், தமிழக மக்களுக்கும் இழைக்கும் 
துரோகமாக, நான் பார்க்கிறேன்.தற்போது, 'நீட்' தேர்வு முடிவுகள் வந்துள்ளன. நம்முடைய மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னையில், மாநில அரசின் நிலையை அறிய விரும்புகி றோம்.இந்த பிரச்னை தீர்க்கப்பட,நாம் இயற்றிய சட்டம் ஏற்கப்பட வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: சட்டசபையில், ஏற்கனவே இரண்டு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் பரிசீல னையில் உள்ளது. மாநில கல்வித்திட்ட அடிப் படையில், 4.20 லட்சம் பேர், 'நீட்' தேர்வு எழுதி உள்ளனர். மத்திய அரசு பாடத்திட்டத் தில், 4,675 பேர் எழுதி உள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர் களுக்கு, பிரதிநிதித்துவம் அளிக்கபட வேண்டும் என்பது தான், அனைவரு டைய உணர்வு. அதற் காகத்தான், சட்டசபை யில், இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அழுத்தம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
மாநில பாடத்திட்ட மாணவர்களின் பிரதிநிதித் துவம் பாதிக்கக் கூடாது என்பதை மிகுந்த கவனத்தோடு, அரசு கருத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, 22ம் தேதி மாலை, அரசாணை வெளியிடப்பட்டது. அதில், அரசின் நிலைப் பாட்டை சொல்லியிருக்கிறோம். 
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒப்புக் கொள்ளப்பட்டால், பிளஸ் 2 தேர்வு அடிப்படையில், மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை நடைபெறும்.இதில், காலதாமதம் ஏற்பட்டால், மாநில ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், தேர்வு எழுதியவர்களுக்கு, 15 சதவீதம்; மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம், உள் ஒதுக்கீடு வழங்கப்படும். அதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, வரும், 27ம் தேதி முதல், மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்படும்.
முதல் கட்ட,அகில இந்திய கவுன்சிலிங் முடிந்த 
பின், ஜூலை, 17ல் திட்டமிட்டபடி, தமிழக அரசுடைய மருத்துவப் படிப்பிற்கான கவுன்சி லிங் துவங்கும்; உள் ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கும்.
தி.மு.க., - தங்கம் தென்னரசு: பிளஸ் 2 தேர் வில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் களின் நிலை என்ன; நீங்கள், இப்போது கொண்டு வர உள்ள கவுன்சிலிங்கில், பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் பெற்றமதிப்பெண்கள், கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுமா அல்லது 'நீட்' மதிப் பெண்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. 
பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடிய வகையில், இந்த கலந்தாய்வு அமை யுமா என்பதை, அமைச்சர் விளக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர்: இப்போதுள்ள விதிமுறைகளின்படி, தமிழக அரசின் சட்ட மசோதாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், பிளஸ் 2 மதிப்பெண்கள்; 
அது ஏற்கப்படவில்லை என்றால், 'நீட்' மதிப் பெண்கள் அடிப்படையில், கவுன்சிலிங் நடத்துவோம்.எனினும், 'நீட்' மதிப்பெண்கள் அடிப்படையில், கவுன்சிலிங் நடத்தும்போது, அனைத்து இடங்களும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்திற்கு போய்விடக் கூடாது என்பதற்காக, பெரும்பான்மையாக இருக்கக் கூடிய, 4.25 லட்சம் மாணவர்களின், பிரதிநிதித் துவத்தை நிலைப்படுத்தக்கூடிய வகையில், 85 சதவீதம் உள் ஒதுக்கீடு, தமிழக அரசால் வழங்கப் படுகிறது. 
மாநில பாடத்திட்டத்தில், 6,877 பள்ளிகளில் படித்த மாணவர்களின் உரிமையை நிலை நாட்டக்கூடிய வகையில், அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.தி.மு.க., - பொன்முடி: 'நீட் ரேங்க்' போடும் போது, தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும், ரேங்க் போடு கின்றனரா; இந்திய அளவில் ரேங்க் போட்டு, உங்களுக்கு அனுப்புகின்றனரா? பிளஸ் 2 மதிப்பெண்களையும் சேர்த்து, கவுன்சிலிங் நடத்தும் உரிமையை, நீங்கள் கேட்டுப் பெற வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய, 15 சதவீதம், 'சீட்' போக, மீதியுள்ள இடங்களுக்கு மட்டும் தான், இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என, அரசாணை போடப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங், ஜூலை, 17ல், துவங்குகிறது.ஏனெனில், அதற்கு முன், அகில இந்திய கவுன்சிலிங் முடிந்து விடும். அதன்பின், நம்முடைய கவுன்சிலிங் ஆரம்பிக்கிறது. இது, தமிழகத்தில் இருக்கக்கூடிய, 'நீட்' தேர்வு எழுதிவர்களுக்கு மட்டும் தான்.இவ்வாறு விவாதம் நடந்தது