ரூ.451 கோடியில் புதிய பள்ளிக்கட்டிடங்கள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்தார்

ரூ.451 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி  வைத்தார். 
பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 15 அரசு  உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.25 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ்  புன்னைப் புதுப்பாளையம் முனுகப்பட்டு மற்றும் பெரியகோளாப்பாடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.5 கோடியே 26  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள் ஆய்வகக் கட்டிடங்கள் கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை காணொலிக்  காட்சி  மூலமாக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் ரூ.421 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்த  நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமைச்  செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் அனைவருக்கும்  இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.