தமிழக சட்டசபையில், நாளை பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை விவாதத்தில், சாதனை பட்டியல் வாசிக்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அ.தி.மு.க., ஆட்சியில், ஏழு அமைச்சர்கள் மாறினர். இரண்டு முறை செயலர்களும், இயக்குனர்களும் மாற்றப்பட்டனர்.
இதில், அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் ஆகியோர் பதவியேற்ற பின், பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், சட்டசபையில், நாளை பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது. இதில், மேலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, அமைச்சர் வெளியிட உள்ளார்.
மூன்று மாதங்களில், முந்நுாறு சாதனைகள் என்ற அளவுக்கு, சாதனை பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயார் செய்துள்ளது