பிளஸ் 2 மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு

பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் இருப்பதாக கருதிய மாணவர்களிடம், மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


அதன்படி, கூட்டல் பிழைகள் மறுதிருத்தம் செய்யப்பட்டன. சரியாக மதிப்பிடாத விடைத்தாள்களும், மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டன.திருத்தம் செய்யப்பட்ட மதிப்பெண் விபரம், நேற்று தேர்வுத் துறையின், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்த மாணவர்கள், தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, புதிய மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.மதிப்பெண் மாறுதலான பதிவெண்கள் மட்டும், scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மதிப்பெண்ணில் மாற்றம் இல்லாதவர்களின், பதிவெண் வெளியிடப்படவில்லை.