RTE: இலவச எல்.கே.ஜி., நாளை குலுக்கல்

இலவச, எல்.கே.ஜி., இட ஒதுக்கீட்டில், ஜூன், 5ல், 'அட்மிஷன்' நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது. கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 


இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, ஏப்., 18ல் துவங்கி, மே, 26ல் முடிந்தது.இன்று மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, நாளை குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. குலுக்கலில் தேர்வான மாணவர்களின் பட்டியல், நாளை, சம்பந்தப்பட்ட பள்ளி களில் வெளியிடப்படும். அந்த மாணவர்களுக்கு, ஜூன், 5ல், 'அட்மிஷன்' நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.