தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.