Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, May 25, 2017

புதிய மாற்றங்களால் 'கல்வி மறுமலர்ச்சி' மலருது மனஅழுத்தமில்லா மாணவர் சமுதாயம்!

EDUCATION REFORM IN TAMILNADU

கற்றதை மனப்பாடம் செய்து பெற்ற மதிப் பெண்ணை கொண்டாடும் கல்வி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து மாணவரின் சிந்தனை திறனை அதிகரித்தும்,படைப்பாற்றலை ஊக்கு விக்கும் வகையில் தமிழக கல்வி துறையில் அடுத்தடுத்த மாற்றங்கள்அரங்கேறி வருகின்றன. 
'மதிப்பெண்ணே மாணவர் அளவுகோல்,' என்ற மாயையை மாற்றி, மனஅழுத்தத்தை மாணவ ருக்குள் உற்பத்தி செய்யும் தேர்வு முறைக்கு விடை கொடுத்து, அறிவு தேடலை நோக்கிய கல்வித்துறையின் இப்புதிய பயணம் குறித்து பெற்றோர், பள்ளி முதல்வர்கள், கல்வி நிறுவன உரிமையாளர் என்ன சொல்கிறார்கள்...
தொடர்ந்து பொதுத் தேர்வுகள் 
ஹேமா ஆட்ரே, முதல்வர், சி.இ.ஓ.ஏ., பள்ளி, மதுரை: கல்வித் துறையில் சமீபமாக நடக்கும் மாற்றங்கள் இத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். தேர்வு நேரம் குறைப்பு, மனப் பாடம் செய்து படிக்கும் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 'புளு பிரின்ட்', 'புக் பேக்' வினாக்கள் மட்டுமே இல்லாமல் சிந்திக் கும் வகையிலும் வினாக்கள் இடம் பெறுவது ஆரோக்கியமானது. ஆனால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொது தேர்வுக்காக மாண வர்கள் தயாராவது அவர்களை சோர்வடையச் செய்யும்.
புரட்சியை ஏற்படுத்தும் 
அபிலாஷ்,இயக்குனர்,அரபிந்தோ மீரா கல்வி குழுமம், மதுரை: கல்வித்துறையின் அடுத் தடுத்த மாற்றங்கள் அறிவியல் பூர்வமாக நடக் கிறது. பாடத் திட்டங்கள் திட்டமிட்டு அடுத் தடுத்த கல்வியாண்டில் மாற்றப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது. தரத்தை உயர்த்தும் வகையில் பிளஸ் 1ஐ பொதுத் தேர்வாக மாற்றியுள்ளது நல்ல முடிவு.
வினாக்களில் 'அப்ஜெக்டிவ்' முறை வினாக்க ளும் 'புக்பேக்', 'புளுபிரின்ட்' அடிப்படையிலான வினாக்கள் இடம் பெறாமல், சிந்தித்து எழுதும் வினாத்தாளாக இருக்க வேண்டும். குறிப்பாக மொழி பாடங்களை தவிர மெயின் பாடங்களில் அதிகமாக 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் இடம் பெற செய்ய வேண்டும். இதுபோன்ற மாற்றங்களால் தமிழக கல்வித்துறையில் புரட்சி ஏற்படும்.
எளிதாக எதிர்கொள்வர்

எஸ்.ஆக்னஸ்ரீட்டா (முதல்வர், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்): பல பள்ளிகள் பிளஸ்1 பாடங்கள் நடத்தாமல் பிளஸ் 2 பாடங்களையே நடத்தின. இதனால் பிளஸ்1 பாடங்கள் முக்கியத்துவம் இழந்தன. பிளஸ் 1ல் பொதுத் தேர்வு அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது மேல்நிலை பள்ளியில், இரண்டாண்டிற்கும் ஒருங்கிணைந்த சான்றிதழ், அதற்கும் 'ஸ்மார்ட் கார்டு' என அறிவித்திருப்பது வரவேற்கத்தக் கது. இதனால் மேல்நிலை வகுப்பு முடித்து செல்லும் மாணவர்கள்,தேசிய நுழைவுதேர்வை எளிதாக எதிர்கொள்வர்.
சரியான நடவடிக்கையே
ஆர்.கிருஷ்ணமூர்த்தி(தாளாளர், வித்யாபார்த்தி மெட்ரிக் பள்ளி,திண்டுக்கல்): பிளஸ்1ல் மாநில அளவிலான பொதுத்தேர்வு அறிவித்தது சரியான நடவடிக்கையே. பிளஸ்2 பாடத்தை பல பள்ளிகள் இரண்டு ஆண்டுகள் நடத்துவது தடுக்கப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு சி.பி.எஸ்.இ., படத்தை மையமாக வைத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நமது பாடத்திட்டமும் மாற்றப்பட உள்ளது. இது மாணவர்களின் சிந்தனை திறனை அதிகரிக்கும்.
மாணவர் திறன் மேம்படும்
பி.சுபா ஈஸ்வரி ( முதல்வர், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி): சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக மாநில பாடத்திட்டம் அமைகிறது. மனப்பாட சுமை குறைந்து புரிந்து படிக்கலாம். மாணவர் திறன் மேம்படும். 2021ல் சி.பி.எஸ்.இ., மாணவர்களைப்போல கல்வியில் நம்மவர்கள் பிரகாசிப்பர். 6ம் வகுப்பில் ஐ.டி., பாடம் கொண்டு வருவது சிறப்பானது. பல தேர்வுகள் ஆன்-லைனில் நடத்தப்படுவதும், பல்வேறு துறைகளில் 'மொபைல் ஆப்' கள் பயனுக்கு வருவதால் கீழ்நிலை வகுப்பிலே மாணவர்கள் தகவல் தொழில் நுட்பத்தில் முத்திரை பதிப்பர்.
பிரித்து படிப்பதால் எளிமை
ஜீவானந்தம் (முதல்வர், பூர்ண வித்யாபவன், கோடாங்கிபட்டி, தேனி ): பிளஸ் 1ல் அரசு பொது தேர்வு சிறந்தது. புதிய கல்விமுறையால் மாணவர் அறிவு கூர்மை அதிகரிக்கும். பிள்ளை கள் மூன்று ஆண்டுகளுக்கு அரசு பொதுதேர்வு எழுத நேரிடும் என பெற்றோர் குழம்புகின்றனர். பாடங்களை பிரித்து படிப்பதால் ஆர்வமாக படிப்பர். ஐ.ஐ.டி., ஜே.இ.இ., என்.ஐ.டி.இ., போன்ற உயர் கல்வியில் படிக்க வாய்ப்புகள் அதிகரிக் கும். மனப்பாட கல்விமுறை ஒழிந்து செயல் முறை கல்வி திறனை மேம்படுத்தும்.
அறிவு வளர்ச்சி பெறும்
ஸ்ரீனிவாசலு, முதல்வர், ஏ.வி.எம்., மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்: வட மாநில மாணவர் களுக்கு இணையாக போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற புதிய கல்விக்கொள்கை வழி வகுக்கும். மாணவர்கள் மதிப்பெண்ணை குறிக் கோளாக கொண்டு செயல்பட்ட தற்போதைய கல்வி திட்டம் மாறி, மாணவர்கள் அறிவு வளர்ச்சியை மையமாக வைத்து அமைக்கப் படும் புதிய பாடத்திட்டம் வரவேற்கதக்கது, என்றார்.
எதிர்பார்த்த அம்சம்
எம்.அஜ்மல்கான், தலைமை ஆசிரியர், கீழ முஸ்லிம் மேல்நிலை பள்ளி, பரமக்குடி: போட்டித் தேர்வுகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்களில்இருந்தே கேள்விகள் கேட்கப்படு கின்றன. அகில இந்திய அளவில் நடக்கும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற வாய்ப் பாக அமையும்.இத்துடன் அனைத்து பாடங் களுக்கும் அக மதிப்பெண் வழங்குவதாக கூறி இருப்பது நீண்ட நாட்களாக ஆசிரியர்கள் எதிர் பார்த்த அம்சமாகும். இந்த முறையால் 
மாணவர்கள் எளிதாக தேர்வில் வெற்றி பெறவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.
புரிந்து படித்தால் வெற்றி
கே.ஆர்.பரமேஸ்வரன், முதல்வர், புதுவயல் கலைமகள் வித்யாலயா பள்ளி: மத்திய அரசின் நீட், ஐ.ஐ.டி., தேர்வில் பிளஸ் 1 பாடங்களிலிருந்து 50 சதவீத வினாக்கள் கேட்கப்படுகிறது. பள்ளிகள் அவர்களுடைய வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு, பிளஸ் 2 பாடத்தை நேரடியாக நடத்தி மாணவர் களை மனப்பாட இயந்திரமாக மாற்றினர். தற்போதைய பொது தேர்வு அறிவிப்பால், பிளஸ் 1 பாடத்தையும் நடத்த வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. புரிந்து படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதன் மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மாணவர்கள் இந்திய அளவில் முதலி டம் பெறுவார்கள். மதிப்பெண்ணை மட்டும் நம்பி இயங்கி வந்த பள்ளிகளுக்கு மட்டுமே இது சிரமம். 
எளிதில் மாணவர்கள் வெற்றி
எம்.விவேகானந்தன், முதன்மை முதல்வர், 21 ம் நுாற்றாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை: தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப் படையில் தரப்பட்டியல் வெளியிடாதது மாணவர் களுக்கும், பெற்றோருக்கும் மனஅழுத்தத்தை குறைத்துள்ளது.இனி தேர்வு என்றால் பயம் இருக் காது. பொதுத்தேர்வு அறிவிப்பால் பிளஸ் 1 பாடங் களை கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு மதிபெண்களை தலா 600 குறைத்திருப்பது நல்ல அம்சம். அறிவித்தப்படி செயல்படுத்த வேண்டும். வினாத்தாள் வடிவமைப் பையும் விரைவில் வெளியிட வேண்டும்.
படிப்பில் ஏற்றத்தாழ்வு நீங்கும்
எஸ்.சித்ராஜெயந்தி (முதல்வர், ஜேசீஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி சிவகாசி) : மதிப்பெண்களை மையம் வைத்து மட்டும் பள்ளிகள் இயங்காது. மாணவர்கள் மீதும் அக்கறை செலுத்த துவங்குவர். தனித்திறமையை மேம்படுத்தும். இதன் மூலம் தன்னம்பிக்கை, வளர்ச்சி ஒருசீராக இருக்கும். படிப்பில் ஏற்றத்தாழ்வு நீங்கும். உயர்கல்வியில் சிறந்து விளங்க முடியும். கல்லுாரி போல் நடை முறை வைத்தால் மாணவர்கள் படிப்பதில் கவனம் குறையும்.
ஆசிரியர்களுக்கு தேவை புத்தாக்க பயிற்சி
அ.சுதாகரன்(முதல்வர், ஸ்ரீவி.லயன்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார்): அகில இந்திய நுழைவுத்தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் அளவிற்கு தற்போதைய பாடத்திட்டம் தயார் படுத்தாமல் இருந்தது. இது தற்போதய மாற் றங்கள் மூலம் சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற பாடதிட்டங்களுக்கு நிகராக பாடதிட்டத்தை மேம்படுத்த இருப்பது வரவேற்கதக்கது. இதனால் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் புதிய பாடத்தை சரிவர கற்பிக்க, வல்லுனர்களை கொண்டு புத்தாக்க பயிற்சி அளிப்பது மிகவும் அவசியம்.
புரிதல் திறன் அதிகரிக்கும் 
சனாஸ்ரீ, பெற்றோர், மதுரை: என் குழந்தைகளை சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் படிக்க வைக்கி றேன். தமிழக கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் அனைத்து வகை மாணவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும். பிளஸ் 1 பொது தேர்வு என்பதால் அதை கட்டாயம் மாணவர் படிக்க வேண்டும். பிளஸ் 1 பாடத் திட்டத்தில் உயர் கல்விக்கு தேவையான விஷயங்கள் உள்ளன.
மனப்பாடம் செய்து படித்தால் மதிப்பெண் பெற முடியுமே தவிர மாணவர்கள் எதிர்காலத்தில் எவ் வித பலனும் இருக்காது. சிந்தித்து எழுதும் முறை யால் மாணவர்களின் புரிதல் திறன் அதிகரிக்கும். நம் பாடத் திட்டங்களை சி.பி.எஸ்.இ.,க்கு இணை யாக மாற்றம் செய்யப்பட்டால் அரசு பள்ளிகளின் தரம் அதிகரிக்கும் என்பதில் மாற்றம் இல்லை.
தரம் அதிகரிக்கும் 
யாழினி, பெற்றோர், மதுரை: பிளஸ் 1 பாடங்களை படிக்காமல் நேரடியாக பிளஸ் 2 படித்து விட்டு உயர் கல்விக்கு செல்வதால் பொறியியல், ஐ.ஐ.டி.,யில் கணிதம், அறிவியல் பகுதிகளில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2விலும் இணைத்து ஒருங்கிணைந்த மதிப்பெண் கணக்கீடு செய்வது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும். 
அதுபோல் ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண்ணில் மாணவர் செயல்திறனுக்கு 10 மதிப்பெண் வழங்கப் படுவதால் அவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிப்பர். சிறந்த மாணவர் சமுதாயம் உருவாகும். ஆறு முதல் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,) பாடம் சேர்க்கப்படுவது, ஆசிரியர்கள் தரத்தை அதிகரிக்கும் வகையில் கையேடுகள் வழங்குவது போன்றவை கல்வி தரத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வாழ்வை எதிர்கொள்வர்
சுதாராணி (பெற்றோர், திண்டுக்கல்): தற்போதுள்ள கல்வித்திட்டத்தில் மனப்பாடமே பிரதானமாக உள்ளது. புத்தகப் பைகளை சுமந்து, அவர்களின் முதுகு சாய்ந்து விட்டது. போட்டி உலகத்தில் நமது குழந்தைகளும் ஜெயிக்க வேண்டும், பின்தங்கி விடக்கூடாது. வேலை என்பது இரண்டாம் கட்டமே.
வாழ்க்கை பிரச்னைகளை எதிர்கொள்ள அவர்களா கவே சிந்தித்து தீர்வு காண வேண்டும். சாதனை படைக்க வேண்டும் என பெற்றோர் நினைப்பர். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து, செய் முறைகள், சிந்தனை ஆற்றலை வளர்க்கும் கல்வியை தர வல்லதாக புதிய பாட திட்டம் அமை யும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் இந்த நடவடிக்கையை வரவேற்கலாம்.
முழுமையான மாற்றம் தேவை
எஸ்.இந்திரா(பெற்றோர், திண்டுக்கல்): அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது தமிழ்நாட்டில் 'கட்டாயம்' என்ற நிலை வந்து விட்டது. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளில் மாற்றம் வரவேற்கத் தக்கது. ஆனால் ஏற்கனவே உள்ள பாடத் திட்டத்தின் ஒரு சில பகுதிகளை மட்டும் மாற்றுவதாக தெரி கிறது. அதைவிடுத்து ஏற்கனவே உள்ள கல்வி முறையில் முழுவதும் மாற்றம் கொண்டு வர வேண்டும். மாணவர்கள் 'நீட்' தேர்வு, ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவு தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் தயாராக வேண்டும் ,என்றார்.
மன அழுத்தம் இருக்குமா
எம்.சுமந்திராதேவி (பெற்றோர், தேனி): புதிய பாட திட்டத்தால் மூன்று ஆண்டிற்கும் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்பதால் மன அழுத்தம் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. 10ம் வகுப்புவரை சமச்சீர் கல்வியில் படித்து முடித்து பிளஸ் 1ல், சி.பி.எஸ்.இ., பாடம் என்கின்ற போது பயம் ஏற்படுகிறது. ஆனால் 'நீட்' தேர்விற்கு புதிய பாடத்திட்டம் பயன்படும் என்றால் வரவேற்க தக்கதுதான். ஆரம்பத்தில் குழப்பம் இருக்கும். பின்னர் சரியாகும் என நம்புகிறோம். ஒரே மாதிரியான கல்வி திட்டமாக இருப்பது சிறந்தது.
வரவேற்கத்தக்க மாற்றம்
கே.அமுதா, பெற்றோர்,ராமநாதபுரம்: அரசின் புதிய கல்விக் கொள்கை வரவேற்கத்தக்கது. 
மாணவர்கள் தரமான கல்வியை பெற வேண்டும். மதிப்பெண்களை குறைத்து பாடத் திட்டங்களை மாற்றம் செய்யும் போது மாணவர்கள் அறிவுத்திறன் வளர்ச்சி பெறும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் வெற்றி பெறும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். வாழ்க்கைக்கு பயனுள்ள கல்வியை அரசு வழங்குவதில் தாமதம் கூடாது, என்றார்.
பாடதிட்டம் வரவேற்கத்தக்கது
தேன்மொழி, பெற்றோர், திருப்புவனம்: கிராமப் புற மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராகும் வகையில் பாடத் திட்டம் சரி. ஆனால் அதனை கற்பிக்கும் அளவுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் கள், ஆய்வு கூட வசதி பற்றி எதுவுமே சொல் லப்படவில்லை அதனையும் சரி செய்தால் நல்லது. ஆனால் அதற்கு உரிய புத்தகங்கள், உள்ளிட்டவை உரியநேரத்தில் மாணவர் களுக்கு கிடைக்க வேண்டும். தனியார் பள்ளி களைப் போல தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
புத்துணர்வு ஏற்படும்
கே.பாப்பா,பெற்றோர் ஏ.வேலங்குடி: 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைப்பதால், ஒரு வகுப்பிற்கான பாடமே படிக்காத நிலை நீக்கப்பட்டுள்ளது.மேலும் 12ம் வகுப்பு பாடத் தையே திருப்பி, திருப்பி படிக்கப்படுவதும் தவிர்க்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் சலிப்பில்லாமல் புத்துணர்வுடன் புதிய பாடத்தை படிக்க உதவுவதுடன் புதிய பாடங் களை அறிய உதவுகிறது. இளம் வயதில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்வுகள் நடத்தப்படுவது நல்லதே. அதே போன்று ஒரே மதிப்பெண்கள் என்ற அளவுகோலும், தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளதும் தேவையான மாற்றமே.
இதுவும் ஒரு கசப்பு மருந்தே
கார்த்திகா(ராஜபாளையம்): சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட மேலான வகையில் தமிழக பாடத்திட்டம் அமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது வரவேற்கத்தக்கது. 10, 11, 12 ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு முறை மீண்டும் மார்க்குகள் மற்றும் அடுத்த மாணவர் களுடன் ஒப்பீடு போன்ற மன அழுத்தங்க ளுக்கே வழிவகுக்கும். ஆழமான அறிவு தேடல் சார்ந்த புதியபாடதிட்டத்தையும் வரவேற்கி றோம். புதிய பாடதிட்ட முறை பெற்றோருக்கு அதிக வேலைப்பளுவும், செலவும் கொடுப்ப தாக இருக்கப்போவது மட்டும் உண்மை. எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தா லும் இதுவும் ஒரு கசப்பு மருந்தே. இருந்தாலும் இம்மாற்றத்தை வரேவற்பதே அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவி.
மனப்பாடம் மட்டும் கல்வி அல்ல
ரேகா(விருதுநகர்): கல்வித்துறையில் சில மாற்றங்களை செய்வது வரவேற்கத்தக்கதாவே உள்ளன.பிளஸ் 1 தேர்வையும் பொதுத் தேர் வாக அறிவித்தது சிறந்தது. பத்தாம் வகுப்பு முதல் மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டால் அடுத்து மருத்துவம், பொறியியல் என உயர்கல்விக்கு செல்லலாம். மாணவர்கள் முழு வேகத்தையும் காட்டி செயல்படுவார்கள். சில தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் அந்த பாடத்தை புறக்கணித்துவிட்டு பிளஸ் 2 பாடங்களை துவக்கிவிடுகின்றனர். இவர்க ளுக்கு மனப்பாடம் திறன் மட்டுமே இருக்குமே ஒழிய சிந்திக்கும் திறன், காலத்திற்கு தகுந்தாற்போல செயல்படுவது போன்றவை குறையும்.
கால அவகாசம் தேவை
பாபு அப்துல்லா, கல்வியாளர்: வரவேற்கத் தக்கது. கால அவகாசம் வழங்க வேண்டும். கேரளா வில் மத்திய அரசின் பாடத்திட்டத் தினை பின்பற்றுகின்றனர். அங்கு அகில இந்திய போட்டி தேர்வுகளில் எளிதில் தேர்ச்சி பெறுகின்றனர். நீட் தேர்வு காலத்தின் கட்டா யம். அதே போல் சி.பி.எஸ்.இ., மெட்ரிக், ஸ்டேட் போர்டு என்றில்லாமல், அனைவருக் கும் மத்திய அரசின் பாடத்திட்டத்தினை எல்லோருக்கும் பொதுவாக கொண்டு வர வேண்டும். அதற்காக ஆசிரியர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும், என்றார்.
புரிந்து படிக்க வாய்ப்பு
த.தனுஷ்கோடி, கல்வியாளர்: பிளஸ் 1 தேர் வில் மாற்றம் வரவேற்கத்தக்கது. பல பள்ளி களில் பிளஸ் 1 பாடம் நடத்தாமலேயே பிளஸ் 2-வுக்கு நடத்துகின்றனர். இதனால், மாணவர் கள் போட்டி தேர்வில் சிரமப்படுகின் றனர். பிளஸ் 1 பாடத்திட்டத்தின் அடிப்படை தெரிவ தில்லை. நிறைய இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் முதல் ஆண்டில் பெயிலாகின் றனர். முதல் செமஸ்டர் பிளஸ் 1 அடிப்படை யில்தான் கேள்விகள் உள்ளது.பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ-க்கு இணையாக கொண்டு வருவது போட்டி தேர்வுக்கு எளிதாக இருக்கும். புரிந்து படிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
நம்பிக்கையை வளர்த்துள்ளது
மணிமாறன் (கல்வியாளர் ,விருதுநகர்): அடிப் படை கல்வி பிளஸ் 1 பாடங்களில் உள்ளது. இதை தவிர்க்கும் பள்ளிகள் பல, பிளஸ் 2 பாடத்தை இரு ஆண்டுகள் நடத்துகின்றன. ஒரே பாடத்தை இரு ஆண்டு படிக்கும் மாண வன், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மற்றவர்களை காட்டிலும் அதிக மதிப்பெண் பெறுகிறான். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் இது அதிகம் நடந்தது. 
இரண்டு ஆண்டு படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவன், உயர்கல்வி படிக்கும்போது தடுமாகிறான். பிளஸ் 1 க்கு அரசு பொதுத்தேர்வு வேண்டும் என கல்வியாளர்கள் கடந்த பத்து ஆண்டு முன் கோரிக்கை வைத்தனர்.அது தற்போது நடந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. 
நீட், ஜே.இ.இ., மற்றும் சிவில் சர்வீஸ் போன்ற தேர்வு கேள்விகள் 60 சதவீதம் பிளஸ் 1 பாட பிரிவு, 40 சதவீதம் பிளஸ் 2 பாடத்திட்டத் திலும் கேட்கின்றனர். கல்வித்துறையில் தற் போதைய மாற்றம் மாணவர்களுக்கு முன்னேற்றத்தை தரும்.

No comments:

Post a Comment