பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்!' - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பள்ளிகள் திறப்பது குறித்து அவர் கூறியதாவது...
'தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவினர் கடந்த ஒரு மாதமாக தனியார் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வின்போது அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிக்கூடங்களில் யோகா, விளையாட்டு, சாலை விதிகள், தேசப்பற்று ஆகியவை குறித்து மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் காலச்சூழ்நிலை அறிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.' என்றார்.