+2 மறுகூட்டல்: ஒப்புகை சீட்டு எண் முக்கியம்

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோர், ஒப்புகை சீட்டு எண்ணை பாதுகாக்குமாறு, தேர்வுத் துறை அறிவுறுத்தி உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 12ல் வெளியான நிலையில், 'மதிப்பெண்ணில் சந்தேகம் இருப்போர், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்தது. 

இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது. இந்நிலையில், 'மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு எண் மூலமே, மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்; விடைத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியும்' எனவும், தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.