PF கணக்கில் விரைவில் 5 மாற்றங்கள் (50,000 ரூபாய் போனஸ், புதிய வட்டி விகிதம்)

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 2016-2017 நிதி ஆண்டிற்கான வட்டி
விகிதம், ஆதார் இணைப்பு, புதிய போனஸ் திட்டம் எனப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
 ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனைவரும் பிஎப் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. முன்பு ஆதார் எண்ணை இணைக்க மார் 31-ம் தேதி தான் கடைசித் தேதி என அறிவித்து வருங்கால வைப்பு நிதி ஆணையம் அதனைச் சற்று தளர்த்தி ஏப்ரல் 30-ம் தேதி என அறிவித்தது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் இதே போன்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இவை மட்டும் இல்லாமல் அன்மையில் பிஎப் திட்டத்தில் பிற மாற்றங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
வட்டி விகிதம்
வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள 4 கோடி சந்தாதார்களும் 2016-2017 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதமாக 8.65 சதவீதம் அளிக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் கமிட்டி முடிவு செய்துள்ளது, அதனை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசு இன்னும் ஓர் இரு நாளில் 8.65 சதவீதமாக வட்டி விகிதத்தை அறிவிக்கும் என்று அதிகாரப் பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
50,000 ரூபாய் போனஸ்
வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு செய்து இடையில் எடுப்பதைத் தவிர்க்கும் வண்ணமாக 20 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள பிஎப் கணக்குகளுக்கு 50,000 ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும். 20 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பங்களிப்பு செலுத்தி வந்த பிஎப் கணக்குகளுக்கும் பணத்தைத் திரும்பப் பெறாமல் இருந்தால் 50,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்த பிறகு இந்தத் தொகை வழங்கப்படும்.
 
இறந்த பிஎப் சந்தாதார்களைச் சார்ந்தவர்கள்
வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ள சந்தாதார்கள் இறந்து விட்டால் தற்போது அவர்களைச் சார்ந்தவர்களுக்கு அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது, ஆனால் குறைந்தபட்ச தொகை என்று ஒன்று இல்லை. எனவே புதிதாகக் குறைந்தபட்ச தொகையாக 2.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றது.
 
பங்குச் சந்தை முதலீடு
வருங்கால வைப்பு நிதி ஆணையம் இப்போது 10 சதவீதம் பிஎப் தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றது, இப்போது அதனை 15 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதனை வர்த்தகச் சங்கங்கள் எதிர்த்து வருகின்றன. 2017 பிப்ரவர் 15-ம் தேதி வரை வருங்கால வைப்பு நிதி ஆணையம் 18,069 கோடி ரூபாயை ஈடிஎப் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 18.13 சதவீதம் வரை லாபமும் பெற்றுள்ளது.
 
பிஎ பணத்தை எளிதாகத் திரும்பப் பெற செயலி

4 கோடி பேர் பிஎப் சந்தாதார்களாக உள்ள நிலையில் பணத்தை எளிதாகத் திரும்பப் பெறயூமங்' என்ற பெயரில் மொபைல் செயலி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதன் மூலம் இணையதளம் மூலம் பிஎ பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை அளிப்பது மிகவும் எளிமைப்படுத்தப்படும்.