இடஒதுக்கீட்டை பின்பற்றவில்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள
விகிதாசாரத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனதலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம்உத்தரவிட்டுள்ளது.


 Directorate of school education fb

இதன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவிகிதமும் மிகவும்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவிகிதமும் தாழ்த்தப்பட்டவகுப்பினருக்கு 18 சதவிகிதமும் பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும்மாணவர் சேர்கையில் இடஒதுக்கீடு வழங்குவதை தலைமைஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்இட ஒதுக்கீட்டைபின்பற்றவில்லை பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும்சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த விதிகள் முறையாகபின்பற்றப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த அறிவிப்புவெளியாகியுள்ளது.


அரசுப் பள்ளிகளில் இட ஒதுக்கீடுஉத்தரவைப் பின்பற்றாவிட்டால்நடவடிக்கை
அரசுப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள்சேர்க்கை நடத்தப்பட வேண்டும்இதைப் பின்பற்றாத பள்ளிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைஇயக்குநர் .கண்ணப்பன் கூறியுள்ளார்இது தொடர்பாக அவர்சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளிமாணவர் சேர்க்கையின் போது மாநில அரசின் அரசாணையில்குறிப்பிடப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கைநடைபெற வேண்டும் என அனைத்துத் தலைமை ஆசிரியர்களையும்,அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு 20%, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18%,பழங்குடியினருக்கு 1%, பொதுப்பிரிவினருக்கு 31% எனவரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த இட ஒதுக்கீட்டு முறை பல்வேறு பள்ளிகளில்கடைப்பிடிக்கப்படுவதில்லை என புகார்கள் வந்துள்ளனஇதைக்கருத்தில் கொண்டு அனைத்துத் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தைமுதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டிஇட ஒதுக்கீட்டைப் பின்பற்றிமாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்இதை மீறிச் செயல்படும்தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்உத்தரவை மீறிச்செயல்படும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்றும் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கெனப் பதிவேடு ஒன்று ஆரம்பித்துஅனைத்து விண்ணப்பங்களையும் பதிவு செய்துதலைமை ஆசிரியர்தலைமையில் குழு அமைத்துவிண்ணப்பங்களைப் பரிசீலித்து அரசுஇட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்மேலும் முதன்மைக் கல்விஅலுவலரின் ஒப்பம் பெற்றே மாணவர் சேர்க்கையை இறுதி செய்யவேண்டும்.

இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கைநடைபெற்றுள்ளதாஎன்பதை நன்கு ஆராய்ந்து ஆகஸ்ட் 31-ஆம்தேதிக்குள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இயக்குநருக்குஅறிக்கை அளிக்க வேண்டும்.