NEET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்காததால் மாணவர்கள் குழப்பம்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால், மாணவர்களும், பெற்றோரும் குழப் பத்தில் உள்ளனர்.இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் வலி யுறுத்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அடுத்த வாரம் மீண்டும் டெல்லி செல்கிறார்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET - நீட்) வரும் மே 7-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண் ணப்பித்துள்ளனர். சுமார் 1,500 இடங்களில் தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் இத்தேர்வு நடக்க உள்ளது.இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்த 2 மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை.

இதுதொடர்பாக அரசு மருத் துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்து வர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) மாநிலத் தலைவர்டாக்டர் என்.லட்சுமி நரசிம்மன் கூறிய தாவது:

நிரந்தர விலக்கு வேண்டும்

தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதிபடைத்த மாணவர்கள் நீட் தேர்வுக்காக பயிற்சி மையங்களில் சேர்த்து படிக்கின்றனர். மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களால்நீட் தேர்வு எழுத முடியாது. நீட் தேர்வு நெருங்குவதால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும், பெற்றோரும்பெரும் குழப்பத்தில் உள்ளனர். நீட் தேர்வு அமலுக்கு வந்தால், கிராமப்புற மாணவர்கள் டாக்டராக முடியாது. எனவே,நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:மாநில பாடத்திட்ட மாணவர்கள்

நீட் தேர்வு தொடர்பாக கடந்த 8-ம் தேதி டெல்லி சென்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தோம். ‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வை தமிழகம் எதிர்ப்பதாக நினைக்க வேண்டாம். தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களின் இடங்களுக்கு நீட் தேர்வு நடத்துவதில் பிரச்சினை இல்லை. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில்உள்ள மாநில அரசு இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப் பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும். மாநில பாடத் திட்டத் தில் படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடிய வில்லை. அவர்களுக்காகவே விலக்கு கேட்கிறோம்’ என்று தெரிவித்தோம். அதை ஏற்றுக் கொண்டனர். இதுதொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளோம். இவ்வாறு சி.விஜய பாஸ்கர் கூறினார்.