தமிழகம் முழுவதும் மே மாதம் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்குமா?

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பள்ளி செல்லா
குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இவ்வாறு கணக்கெடுக்கப்படும் குழந்தைகள், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும்.
இதற்கான சுற்றறிக்கை மார்ச் மாதத்தில் வட்டார வள மையங்களுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் குழு அமைத்து பணிகளை தொடங்குகின்றனர். நடப்பு ஆண்டுக்கான சுற்றறிக்கை வட்டார வள மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் குழு அமைத்து பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி வரும் மே மாதம் தொடங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, `உள்ளாட்சி தேர்தலை மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் தேர்தல் பணிகள் வழங்குவதால் கணக்கெடுப்பு மே மாதம் தொடங்குமா என்பதுசந்தேகம்.’’ என்றனர்.