பணிபுரியும் பெண்களுக்கு பிரசவ கால விடுப்பை அதிகரிக்கும் மசோதா நிறைவேறியது

இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961–ன் படி பணிபுரியும் பெண்களுக்கு 
12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த 
கால அளவை 26 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. 
இதற்காக மேற்படிசட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு
 உள்ளது.இதற்கு வகை செய்யும் ‘மகப்பேறு உதவி திருத்த மசோதா–2016’, 
கடந்த ஆண்டு டெல்லி மேல்–சபையில் தாக்கல் செய்யப்பட்டு
நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த மசோதா நேற்று
 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதை தாக்கல் செய்த மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, பெண்களின் பேறுகால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக (2 குழந்தைகளுக்கு) உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 10 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று கூறிய மந்திரி, இதன் மூலம் சுமார் 18 லட்சம் பெண் பணியாளர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார்.
இந்த மசோதா உறுப்பினர்களின் ஆதரவோடு பாராளுமன்றத்தில் நிறைவேறியது