சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு...விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017

..எஸ்., .பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு சைதை
துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது | ..எஸ்., .பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை, சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது. இதுகுறித்து மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இலவச பயிற்சி சைதை துரைசாமியை தலைவராகக் கொண்டு இயங்கும் மனிதநேய பயிற்சி மையம், மத்திய-மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்வதற்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இவ்வாறு அளிக்கப்பட்ட இலவச பயிற்சிகளில் கலந்துகொண்டு, ..எஸ்., .பி.எஸ். போன்ற பணிகள் முதல் பல்வேறு வகையான பணிகளில் 2,838 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது இந்த மையம் 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள ..எஸ்., .பி.எஸ். போன்ற பணிகளின் முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை உடனடியாக தொடங்கி 2018-ம் ஆண்டு மே மாதம் வரை நடத்த இருக்கிறது. நுழைவுத்தேர்வு இந்த பயிற்சிக்கான தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக, மனிதநேயம் தமிழகத்திலுள்ள 32 மாவட்டத்தின் தலைநகரங்களில் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி நடைபெறும். நுழைவுத் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படும். இந்த தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் எல்லாதரப்பு மாணவர்களும் எழுதும் வகையில், அடிப்படை பொதுஅறிவு சார்ந்தவையாகவே இருக்கும். இந்த வினாக்களுக்கு விடையளிப்பதற்கு அதிகபட்ச கூடுதல் திறமை தேவையில்லை. மாணவர் தேர்ந்தெடுப்பில் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு உண்டு. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவ-மாணவியர்களும் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். கடைசி தேதி இந்த பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.sai-d-ais.com என்கிற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளப் பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017 ஆகும். 22.4.2017 முதல் அனைத்து மாணவர்களும், நுழைவுத் தேர்வுக்கான தங்களின் அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) மேற்கண்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெற முடியாதவர்கள், தங்களது புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதிச் சீட்டாகும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 2435 8373, 9840106162. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.