CBSE :பிளஸ் 2 தேர்வு : சாக்லேட் எடுத்து வர அனுமதி

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கான, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவர்கள் தேர்வறைக்குள் சாக்லேட் எடுத்துச் செல்லலாம். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, மார்ச், 9ல், பொதுத் தேர்வு
துவங்குகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு அறையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாக்லேட் எடுத்துச் செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு: பள்ளி மாணவர்களில் பலர், முதல் நிலை சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில், குளுக்கோஸ் அடங்கிய உணவு உட்கொள்ள வேண்டும். இதை கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ., தேர்வில், சர்க்கரை நோய் மாத்திரை, கேண்டி என்ற இனிப்பு மிட்டாய், வாழைப் பழம், ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற பழங்கள், 'சாண்ட் விச்' போன்ற உணவு மற்றும் அரை லிட்டர் குடிநீரை, தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இதை கொண்டு வர விரும்பும் மாணவர்கள், தங்களுக்கான தேவை குறித்து, டாக்டரிடம் பரிந்துரை கடிதமும், பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதி கடிதமும் பெற்று வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.