மார்ச் 31க்கு பிறகு இலவசம் கிடையாது.. சலுகை தொடர ஜியோ பிரைம் திட்டத்தில் சேருங்கள்: முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 4ஜி சேவையை நாடு முழுவதும் தொடங்கியது. இலவச சிம், இலவச கால் அழைப்புகள், இலவச டேட்டா சேவை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்தது. முதலில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இன்டர்நெட் மற்றும் அழைப்புகள் அனைத்தையும் இலவசமாக கொடுத்தது. பின்னர் அச்சலுகையை மார்ச் 31ம் தேதி வரை அந்நிறுவனம் நீட்டித்தது. ஜியோவின் இந்த சலுகைகளால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மேலும் பல்வேறு சலுகைகளை முகேஷ் அம்பானி மும்பையில் இன்று அறிவித்தார். Jio Prime Announced at Rs 99 With Free Jio Services VIDEO : Soha Ali Khan and Kunal Kapoor walk the ramp for Maheka Mirpuri; Watch Video Soha Ali Khan and Kunal Kapoor walk the ramp for Maheka Mirpuri; Watch Video Lifestyle & Fashion Powered by Popular Videos புழல் சிறைக்கு மாற்றப்படுவார் சசிகலா.. சொல்கிறார் கர்நாடக அதிமுக செயலாளர்- வீடியோ00:35 புழல் சிறைக்கு மாற்றப்படுவார் சசிகலா.. சொல்கிறார் கர்நாடக அதிமுக செயலாளர்- வீடியோ 21-02-2017 ராசிபலன்-இன்றைய நாள் எப்படி இருக்கும்-வீடியோ04:19 21-02-2017 ராசிபலன்-இன்றைய நாள் எப்படி இருக்கும்-வீடியோ ஐபில் ஏலம் 2017, விலை போகாத வீரர்கள்-வீடியோ01:05 ஐபில் ஏலம் 2017, விலை போகாத வீரர்கள்-வீடியோ அப்போது அவர் பேசியதாவது : ஜியோ சலுகை மார்ச் 31ம் தேதி முடிந்தாலும் பின்னரும், கால் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படாது மாதந்தோறும் அளவில்லா இலவச கால் மற்றும் டேட்டா பெற ஜியோ பிரைம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்து.. பிரைம் திட்டப்படி, மாதந்தோறும் அளவில்லா கால் பெற ரூ. 99 கட்டணமும், அளவில்லா டேட்டா சேவையை பயன்படுத்த ரூ. 303 கட்டணமும் வசூலிக்கப்படும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட 20 சதவித கூடுதல் டேட்டாவை ஜியோ வழங்கும். மார்ச் 31க்குள் ஜியோ சிம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரைம் திட்டத்தின் சலுகை உண்டு. கடந்த 170 நாட்களில் ஜியோவின் 4ஜி சேவை 10 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்துள்ளது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 2018ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இலவச சேவை நீட்டிக்கப்படும் ஒரு நொடிக்கு 7 புதிய வாடிக்கையாளர்கள் ஜியோவில் இனணகிறார்கள். ஜியோ வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 100 கோடி ஜிபி-க்கு அதிகமான டேட்டாவை பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் 5.5 கோடி மணி நேர வீடியோ பயன்பாட்டை ஜியோ மேற்கொண்டு வருகிறது. ஜியோ சேவையால், டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இணைய டேட்டா பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் , ஜியோ டேட்டவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் சமமாக உள்ளது என்று தெரிவித்தார்.

l