+2 மே 12, எஸ்எஸ்எல்சி மே 19: தேர்வே ஆரம்பிக்கலை, அதற்குள் ரிசல்ட் தேதி அறிவித்த செங்கோட்டையன்!

சென்னை: இந்த ஆண்டு பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முறையே மே மாதம் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரம் Politics Powered by Popular Videos ஸ்டாலின் நல்ல நடிகர் - டிடிவி தினகரன்-வீடியோ03:06 ஸ்டாலின் நல்ல நடிகர் - டிடிவி தினகரன்-வீடியோ இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி-வீடியோ01:11 இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி-வீடியோ சென்னை, ரயிலிலிருந்து கீழே விழுந்து காயம்-வீடியோ02:25 சென்னை, ரயிலிலிருந்து கீழே விழுந்து காயம்-வீடியோ வருகிற மே மாதம் 12ம் தேதி பிளஸ் டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதே போன்று மே மாதம் 19ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வை பொருத்தவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடத்தப்படும். மார்ச் மாதம் தொடங்க உள்ள தேர்வுகளுக்கான அனைத்துப் பணிகளும் தற்போது முடிவடைந்துவிட்டது என்று செங்கோட்டையன் கூறினார். பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த 6ம் தேதி தொடங்கியது. மார்ச் 2ம் தேதி பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது . இதில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.