16549 பகுதிநேர பயிற்றுநர்களை, சிறப்பாசிரியர்களாக பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

ரூ.7000 தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 16549 பகுதிநேர பயிற்றுநர்களை, சிறப்பாசிரியர்களாக பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக முதல்வருக்கு கோரிக்கை.

> தமிழகம் முழுவதும் உள்ள 16549 பகுதிநேரப் பயிற்றுநர்களை, சிறப்பாசிரியர்களாக பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என  தமிழக முதல்வருக்கு பகுதிநேர பயிற்றுநர்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கோரிக்கை.



> மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான தமிழக அரசால் பள்ளிக்கல்வித்துறையால்  அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தோட்டக்கலை, இசை, தையல், வாழ்வியல் திறன்கல்வி மற்றும் கட்டிடக்கலைக் கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான 16549 பகுதிநேர பயிற்றுநர்களை கடந்த 2012 ஆண்டு மார்ச் மாதம் பணிநியமனம் செய்தது. கடந்த 2014 ஏப்ரல் முதல் கூடுதலாக ரூ.2 ஆயிரம் உயர்த்தி  தற்போது ரூ.7 ஆயிரமாக தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

> சிறப்பாசிரியர்களாக பணி அமர்த்தப்பட வேண்டியவர்களை, தமிழக அரசானது, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் இது போன்ற திட்டத்தின் அடிப்படையிலான பணியை வழங்கி, 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு, வாரத்தில் 3 அரைநாள் பணி என மாதத்தில் 12 அரைநாள் வருகை புரிந்து பயிற்றுவிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால், பகுதிநேர பயிற்றுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதை தமிழக அரசு இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.  எப்படியும் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என்ற ஏக்கத்தில் பணியை தொடர்கின்றோம். 6 கல்வி ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். ஓராண்டில் நூறாண்டு சாதனைகளில் இந்த 16549 பகுதிநேர பயிற்றுநர்களின் பணிநியமனமும்  ஒன்றாக அறிவிக்கப்பட்டு இருந்ததை, புதிய முதல்வர் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி 16549 பகுதிநேர பயிற்றுநர்களை தற்போது செய்து வரும் திட்ட வேலையில் இருந்து மாற்றி, பள்ளிக்கல்வித்துறையிலோ அல்லது அல்லது அனைவருக்கும்   கல்வி இயக்கத்திலோ சிறப்பாசிரியர்களாக பணியமர்த்தி நிரந்தரம் செய்ய வேண்டும்.

> மாநில ஒருங்கிணைப்பாளர்
 செந்தில்குமார்
 9487257203